மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின், ஞாபகார்த்தமாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபை நினைவு கூரும் முகமாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் துஆப் பிராத்தனை நிகழ்வும் 16ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொடை வை. எம்.எம். ஏ. கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐந்தாந்தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் அதிவிசேட சித்திபெற்ற முஸ்லிம் மஜ்லிஸ் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபைப்பற்றிய நினைவுப் பேருரையும் அன்னாருக்கான துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன.

இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸினால் முதல் தடவையாக நடத்தப்படும் இப்புலமைப்பரிசில் வழங்கும் திட்டமானது எதிர்வரும் வருடங்களிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக எம்.எச்.எம். அஷ்ரப் புலமைப்பரிசில் நிதியம் ஒன்றை உருவாக்குவதற்குரிய பணிகளையும் இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்வாண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகமானது பல்வேறு புதிய திட்டங்களை அதன் அங்கத்தவர்களுக்காக நடைமுறைப்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -