ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளிலும் வீதி மின்விளக்குகள் ஒளிராமை என்பதை அறிந்த கிண்ணியா நகர சபை அவர்களுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீதி மின்விளக்குகள் தொடர்பான பதிவுகளை கண்டேன் அதன்பின்னர் பெரியாற்று முனை யின் சில பகுதிகளில் வீதி மின்விளக்குகள் இன்மை என்பதை கொமன்ட்ஸ் மூலம் தெரியப்படுத்தினோம்...அடுத்த நாளே உரிய எமது பெரியாற்று முனை பகுதிக்கு வந்து வீதி மின்விளக்குகளை பொறுத்தினர்.
தற்போதைய செயலாளர் என்.எம்.நௌபீஸ் அவர்களுக்கூடாக ஒரேயொரு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டபோது அடுத்த கட்ட அரைமணி நேரத்திற்கு பிறகு அவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது ..உங்களுடைய பகுதியில் நீங்கள் குறிப்பிட்ட வீதி மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறான அரச சேவைகளும் பொதுமக்களுக்கு கிடைப்பதும் எமக்கு தேவை மேலும் பல இவ்வாறான சேவை கிண்ணியா நகர சபை செயலாளர் ஊடாக கிடைக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்..பெரியாற்று முனை மக்கள் சார்பான நன்றிகளை கிண்ணியா நகர சபை செயலாளர் என்.எம்.நௌபீஸ் அவர்களுக்கு தெரிவிக்கின்றனர்கள்.