வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் 1.5 கோடி ரூபாவுக்கு மேலான தொகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள இரு வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,
இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் வைத்தியசாலை 7.7 மில்லியன் ரூபா செலவிலும் மருத்துவ வாட் தொகுதி புனரமைக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஆய்வு கூடம், வெளி நோயாளர் பிரிவு என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், வாகன தரிப்பிடமும் இங்கு அமைக்கப்படவுள்ளதாக கட்டிடங்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி W.A.W.அபேவர்தன தெரிவித்தார்.
இதனை நான்கு மாதகாலத்தில் நிர்மாணித்து முடித்து மக்கள் பாவனைக்கு ஒப்படைக்க படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.