க.கிஷாந்தன்-
பேராதனை பல்கலைகழக மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள். அதில் மக்கள் வருந்தும் போது மக்கள் துயரடையும் போது மக்கள் அழும் போது அழும் அரசியல் வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தான்.
அதில் நீங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. பொது மக்களை மறக்கும் அரசியல் வாதிகளை பொது மக்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள் என மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச மகளிர் தின விழா 26.03.2017 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.