மேலும் அரசாங்கத்தின் அனுமதி பெறாத ஆடு, கோழி வெட்டும் இறைச்சிக் கூடங்களையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் அனுமதி பெறாமல் செயற்பட்டு வந்த இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும், மூட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைக்காரர்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வௌ்ளிக்கிழமை (24) மாலை, சில பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. நேற்று (25), முழுமையாக மூடப்பட்டன. இந்தப் போராட்டம், கால வரையின்றி தொடரும் என்று போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கோழி, இறைச்சி, மீன், முட்டைக் கடைகள் மூடப்பட்டன. இது மட்டும் அல்ல, அசைவ ஹொட்டல்களும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. தற்போது, எருமை மாடுகளை வெட்டும் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிருக காட்சி சாலைகளில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு, எருமை மாட்டு இறைச்சியை விலைக்கு வாங்கி இரையாக போடுவது வழக்கம். ஆனால், இப்போது எருமை மாட்டின் இறைச்சி கிடைக்காததால், அவற்றுக்கு உணவு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முதலமைச்சர் ஆதித்யநாத், அனுமதிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதில் எந்த தடையும் இல்லை. எனவே, அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று கூறியுள்ளார்.