ஆயிரம் ரூபா சம்பளம் கோரி நான்காவது நாளாகவும் மெதுவான பணி செய்யும் போராட்டம் முன்னெடுப்பு!

க.கிஷாந்தன்-
யிரம் ரூபா சம்பளம் கோரி நான்காவது நாளான 09.07.2015 இன்றும் மெதுவாக பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டதோடு சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உடனடியாக பேச்சுவார்த்தினை நடத்தி உடனடியாக ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுதருமாறு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 250ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை கோரி 09.07.2015 இன்று காலை 10 மணியளவில் குறித்த தோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்ட பேரணி பெரிய நாகவத்தை தோட்டத்திலிருந்து மன்றாசி நகரம் வரை நோக்கி சென்று அங்கு மேற்படி தோட்ட பிரதான வீதியை மறைத்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, டயர்களை எரித்து தோட்ட கம்பனிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் பல மணிநேரம் குறித்த தோட்டத்திற்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தது.

சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். அதன் பின் கலைந்து சென்றனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -