நிஸ்மி அக்கரைப்பற்று-
தொற்றா நோய்கள் சம்பந்தமாக அக்கரைப்பற்று பிரதேச மக்களை விழிப்பூட்டும் நோக்கில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கும் தொற்றா நோய்கள் சம்பந்தமான இலவச பரிசோதனையும் அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் பாளிகா மஹா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (06) இடம் பெற்றது.
சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்,ஏ.பாஸிலா, கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக சுகாதாரக் கல்வி அதிகாரி எஸ்.அப்துல் அஸீஸ், சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எச்.பௌமி, எம்.எச்.மிஹியார் மற்றும் ஈ.ரி.சலீம் ஆகியோர் கலந்து கொண்டு தொற்றா நோய்களான புற்று நோய், கொலஸ்ட்ரோல், நீரிழிவு விஷேடமாக பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்று நோய், இரத்த அழுத்தம் முதலிய நோய்கள் பற்றி விளக்கியதோடு, இந் நோய்கள் சம்பந்தமாக இலவச பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர்களான எம்.எச்.மிஹியார்; ஈ.ரி.சலீம் ஆகியோர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது




