'ஜே.வி.பி. தடை' -83 இல் அரங்கேறிய 'சூழ்ச்சி' சக்கரம் மீள சுழல்கிறது!



ஆர்.சனத்-

'ஜே.வி.பி. தடை' -83 இல் அரங்கேறிய 'சூழ்ச்சி' சக்கரம் மீள சுழல்கிறது!
ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவை ஏராளம்
( ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு)
1994 இல் ஜனநாயக அரசியலுக்குள் மீண்டும் பிரவேசித்தோம். அன்று முதல் இன்றுவரை ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவுமே போராடிக்கொண்டிருக்கிறோம்.
ஜனநாயக வியூகத்துக்குள் ஆழமாக காலூன்றி, அந்த வழியில் அரசியல் பயணத்தை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.
ஜனநாயக வழியில் பயணிப்பதால் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். 94 இற்கு பிறகு அரசியல் காடையர்களால் - குண்டர்களால் எமது தோழர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இவற்றுக்கு பதிலடியாக - ஒரு கல்வீச்சு தாக்குதலைக்கூட நாம் நடத்தியது கிடையாது. ஏன் ஜனநாயகத்துக்காகவே இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டோம்.
ஜனநாயகத்தை பலப்படுத்த 17 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம் பிரயோகித்தோம். அதன்பின்னர் 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதற்காக நல்லாட்சியின்போது தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்தோம்.
1983 இல் கறுப்பு ஜுலையை திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளை தடைசெய்தனர்.
ஜே.ஆரின் ஜனநாயக விரோத அரசியலுக்கு எதிராக துணிந்து போராடினோம்.
முறைகேடாக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம்.
இவ்வாறு ஜனநாயகத்துக்காக
அன்றும் போராடினோம். இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஊழல், மோசடிகளுக்கு எதிரான எமது குரல் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கும். எம்மை மெளனிக்க வைக்க முடியாது.
88-99 இல் அமைச்சர்களின் வீடுகளில் வதை முகாம்கள் இருந்தன. தற்போதைய அமைச்சர்களும் தற்போது பட்டியலை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
அமைதியாக போராடும் மக்களை தாக்கினால், அந்த இடத்தில் நாம் நிற்போம். வன்முறையாளர்கள் மக்களை தாக்கும்போது, வேடிக்கை பார்க்க முடியாது.
1983 இல் ஜே.வி.பிக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சியை மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர்.
மே- 09 சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுக்கவும். அதற்கு முகங்கொடுப்பதற்கு தயார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :