ஓர் அரசியல் திசை மாற்றத்தின் ஆரம்பத்தினை தொடங்கிய மங்களவின் மறைவு பெருந்துயர்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் அஞ்சலி



லங்கை அரசியல் வரலாற்றில் முக்கியாமானதொரு வகிபாகத்தைக் கொண்டிருந்தவர் மங்கள சமரவீர. சந்திரிக்கா - மகிந்த - ரணில் ஆட்சி காலங்களில் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிலும் முக்கிய வகிபாகம் அவருடையது. இனவாத களத்தில் நின்று அதனை எதிர்த்தவர் மங்கள.இவரது அரசியல் தீர்மானங்களில் முக்கியமானது கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களம் இறங்கி பின்னர் விலகிக் கொண்டது. அதன் பின்னால் உள்ள செய்தி பெரிது. ஓர் அரசியல் திசை மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிய போது மங்களவின் மறைவு பெருந்துயர் என நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா விடுத்தருக்கும் அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணத்தை அடுத்து விடுத்தருக்கும் இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பெருந்தோட்ட சுகாதார முறைமையை அரச சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கு நிதி அமைச்சின் இணக்கப்பாடு அவசியம் என சுகாதார மேற்பார்வை குழு தலைவராக நான் அவரை அணுகிய போது, மனமுவந்து அதற்கான சம்மத த்தை அதிகாரகள் ஊடாக வழங்கியவர் மங்கள.

மலையகப் பெருந்தோட்ட புதிய கிராம அதிகார சபை உருவாக்கத்தின் பின்னர் அதனை வரவு செலவுத்திட்ட அறிக்கைக்குள் உள்வாங்கிக்கொள்ள நிதி அமைச்சராக தனது பங்களிப்பை நல்கியவர்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ரம்பொடை 'பகத்சிங்புரம்' இவரது கரங்களினாலேயே மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இவரது மரணம் கொரொனாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடிய ஒன்றல்ல. ஓர் அரசியல் திசை மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிய போதே மரணம் நிகழ்ந்து இருப்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
அவருடன் சமகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட ஒருவனாக என ஆழ்ந்த அஞ்சலியைப் பதிவு செய்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :