கொரோனாவை கடடுப் படுத்தும் நோக்கில் நாடாளவிய ரீதியில் சைனோபாம் 2வது டோஸ் தடுப்பூசி மருந்தேற்றல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.அந்த வகையில் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் அதன் அலுலகப் பிரிவில் இன்று இடம் பெற்றது.
இத் தடுப்பூசி ஏற்றும் நிலையஙகளாக அல் அக்ஸா கல்லூரி மற்றும் கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் மருந்து ஏற்றும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திலும் , பொது மக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அல் அக்ஸா கல்லூரியிலும் இத் தடுப்பூசியினை ஏற்றிக் கொண்டனர்.
1வது டோஸ் தடுப்பூசியை 17ஆயிரம் பேர் ஏற்றிக் கொண்டதாகவும் இதுவரை ஏற்றிக் கொள்ளதவர்களுக்கு தொடர்ச்சியாக இத் தடுப்பூசி ஏற்றப் படவுள்ளதாகவும் சுகாதார வைத்தியதிகாரி குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment