உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடு எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 03 நாட்கள் திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதன் முதல்நாள் நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் எழுதிய "அந்த கல்முனைகுடி நாட்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்படவுள்ளது.
முதல்நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்று இந்த கவிதை நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட மற்றும் சில அரசியல் பிரமுகர்களும் மூத்த கலை, இலக்கியவாதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment