அம்பாறை மாவட்டத்தில் ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!



சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்-
ம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கடற்படையின் ஆழ்கடல் சுழியோடிகளினால் ஒலுவில் துறைமுகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

இப் பயிற்சியில் கலந்து கொண்ட பயிலுனர்களிலுள் ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருது, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தெரிவுசெய்யப்பட்ட ஆழ்கடல் சுழியோடிகளுக்கான விசேட பயிற்சி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சி அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் அல்தாப், கடற்படையினரின் ஆழ்கடல் சுழியோடி போன்றவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :