தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும்



தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமாலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

இந்த உலகை இயக்கிக்கொண்டிருக்கும் - உலக மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அத்தனை தொழிலாளர் தோழர்களுக்கும் இந்நாளில் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்று முதல் இன்று வரை எமது நாட்டில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியவை. எனவே, உடலாலும், அறிவாலும் உழைக்கிற எவருக்கும் எந்த இடத்திலும் அநீதி இழைக்க இடமளியோம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
எமது நாட்டில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உழைப்பை மட்டுமல்ல உயிரைக்கூட இந்நாட்டு மண்ணுக்காக உரமாக்கியுள்ளனர். எனவே, அம்மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய சூழலை நிச்சயம் நாம் உருவாக்குவோம். தோட்டக் காணிகளை தொழிலாளர் தோழர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
அதேபோல எமது கடற்றொழில் தொழிலாளர் தோழர்களுக்கும் பல்வேறு விடயங்களை நாம் செய்து வருகின்றோம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் உழைப்பாளர்களுக்கு எவ்விதத்திலும் அநீதி நடக்காது." - என்றுள்ளது.

ஊடக செயலாளர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :