நுவரெலியா மாவட்டத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் தாமதம் - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உறுப்பினர் ராமச்சந்திரன்



நுவரெலியா மாவட்டத்தில் 11,490க்கும் மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டும் சுமார் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த மாவட்டத்திற்கு குறிப்பாக தோட்டப்புற மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட பல பொது சுகாதார பிரிவுகளில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான உரிய திகதி அறிவிக்கப்பட்டு அது பிற்போடப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் தன்னிடம் இது குறித்து முறையிட்டதையடுத்து மு.இராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தாமதம் ஏற்பட்டள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் அச்சமான மனநிலையில் இருக்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

மலையகத்தில் முதற்கட்டமாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு அரச அதிகாரிகள், சுகாதார பிரிவினர், வைத்தியர்கள் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கட்டாயமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டையின்றி பொதுவெளியில் எவரையும் அனுமதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தோட்டப்பகுதியில் உள்ள மற்றும் அதனை அண்டியவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுப்பதில் தாமத நிலை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காயலயத்திற்கு உட்பட்ட டிக்கோயா பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான முதற் கட்ட தடுப்பூசி இது வரையில் எற்றப்படவில்லை.

அதேபோல மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கு உட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி எதிர்வரும் 30/08 என ஏற்றப்படும் என அறிவித்த போதிலும் குறித்த திகதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதா ர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உரிய சுகாதார தரப்பினர் இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த மாவட்டத்தில் உள்ள குறிப்பாக தோட்டப்பகுதிகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு துரித நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியது அவசியம். காலத்தின் தேவையும் கூட.

அதே போல நுவரெலியா மாவட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் இதன் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :