சவூதி தூதுவர் மற்றும் உள்ளூர் பிரபலங்கள் பங்குகொண்ட தென்கிழக்குப் பல்கலையின் 17ஆவது பொது பட்டமளிப்பு விழா!



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, 2025.05.03 மற்றும் 2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான கூட்ட மண்டபத்தில் மிகவிமர்ஷையாக இடம்பெற்றது.

ஆறு அமர்வுகளைக்கொண்டு, இரண்டு நாட்களில் இடம்பெற்ற பட்டமளிப்புவிழா, பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் தலைமையிலும் வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையிலும் இடம்பெற்றது.

நிகழ்வின்போது இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் மாண்புமிகு காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ யசந்த கொடகொட, களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா பி பண்டார, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்க மற்றும் யாழ் பலகலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ.வேல்நம்பி ஆகிய முன்னணி அறிவியல்சார் நிபுணர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்வில் பங்குகொண்டிருந்த இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் மாண்புமிகு காலித் ஹமூத் அல்-கஹ்தானி, தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட, பீடாதிபதி அஷ்-ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸின் விஷேட அழைப்பின்பேரில் குறித்த பீடத்துக்கு விஜயம் செய்து கல்வியாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இரண்டு நாட்ககளாக இடம்பெற்ற குறித்த ஆறு அமர்வுகளைக்கொண்ட பட்டமளிப்பு விழாவில் 2077 மாணவர்கள் தங்களது பட்டங்களைப்பெற்று வெளியேறினார்.

இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 172 மாணவர்களும் பொறியியல் பீடத்திலிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக மொத்தம் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவின்போது பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை அப்துல் முபாறக் பாத்திமா ஸிஹாதா ஸினோ பெற்றுக்கொண்டார். அத்துடன் 2017/2018 ஆம் கல்வி ஆண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பவா ஞாபகார்த்த விருது முஹம்மட் பௌசர் பாத்திமா றுஸ்தாவுக்கு வழங்கப்பட்டது.

பொறியியல் பீடத்தில் 2017/2018 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருதையும் சிறந்த மாணவருக்கான விருதையும் உதுமாலெப்பை முகம்மட் அஹ்னாப் ஸிஹாப் சுவீகரித்துக் கொண்டார்.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது நஸீர் சமீர் அஹமட் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் 2017/2018 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை சம்சுதீன் பாத்திமா சஸ்னா சுவீகரித்தார்.

2017/2018ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை தரணி பஞ்சலிங்கம் பெற்றுக்கொண்டார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில் 2017/2018 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது செலைமான் முகம்மடு பயாஸுக்கு வழங்கப்பட்டது.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் அரபுமொழி மற்றும் மொழிபெயர்ப்பு துறையில் சிறந்த மாணவருக்கான எம். எச். அப்துல் காதர் (Qahiri) ஞாபகார்த்த விருது முகம்மட் முஸ்தபா பாத்திமா அக்கீலாவுக்கு கிடைத்தது.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது முகம்மட் நௌஷாட் முகம்மட் மினாஸ் பெற்றுக்கொண்டார்.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ வர்த்தக பீடத்திலிருந்து வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான விருதை வெலிக்கட முதியன் செலாகே டாரா சந்தாலி மடுறங்கி பெற்றுக்கொண்டார். 2017/2018 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ துறையில் சிறந்த மாணவருக்கான விருதை மன்சூர் பாத்திமா உல்பத் ஹம்தாணியும் பெற்றனர். அத்துடன் BBA (Hons) in Finance சிறந்த மாணவருக்கான (CSE Gold Medal ) விருது அஹமது தாகா உம்மாவுக்கு கிடைத்தது.

BBA (Hons) in Accounting சிறந்த மாணவருக்கான (CA Sri Lanka Gold Medal) விருது சாஹுல் ஹமீட் ஆfபரின் பானுவுக்கு கிடைத்தது.

Accounting and Finance Courses of B. Com (Hons) துறையில் சிறந்த மாணவருக்கான (CMA Sri Lanka Gold Medal) விருது முகம்மட் அன்சார் பாத்திமா அஸ்ராவுக்குக் கிடைத்தது.

Capital Market Subject துறையில் சிறந்த மாணவருக்கான SEC Gold Medal மற்றும் பணப்பரிசு அப்துல் ஜலால் பாத்திமா சபீகாவுக்கு வழங்கப்பட்டது. Best Capital Market Research Project of Dissertation துறைக்கு SEC பணப்பரிசு சுகர்டீன் பாத்திமா றாசிதாவுக்கு கிடைத்தது.

நிகழ்வுகளின்போது பட்டங்களைப் பெற்றுக்கொண்ட பட்டதாரிகள் அவர்களது உறவினர்கள், அதிதிகள் ஏனையவர்கள் என பல்கலைக்கழக வளாகம் நிறைந்து காணப்பட்டது.



















































 











எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :