நாளை 5.2.2021 நடைப்பெறவுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏனைய ஆசிரிய தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி முழுமையான ஆதரவை வழங்குவதாக மலையக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒரு சாதாரண பிரச்சினையை தாண்டி ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. அவர்களின் சம்பள பிரச்சினை நியாயமானதே அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டும். எனவே நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்களும் நாளைய தினம் 5.2.2021 சுகயீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். அதேபோல நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும் இனம்,மதம்,மொழி பேதமின்றி இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக எமக்கு அறிவித்துள்ளனர். எனவே நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்கள்,கல்வியலாளர்கள் அனைவரும் நாளைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment