மருதமுனை அந்-நஹ்ழா அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்த 73வது சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் ஏ. அபூஉபைதா (மதனி) தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது நாட்டில் நிலையான சுபீட்சம், சமாதானம் மற்றும் இனம்களுக்கிடையில் ஐக்கியம் வேண்டி விசேட துஆ பிராத்தனை நடைபெற்றதுடன் ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் இலக்கு' தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய மரம் நடுகையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான எப்.எம். அஹமது அன்சார் மௌலானா, பிரதிஅதிபர் ஏ.எச்.எம்.பர்ஸான் (காபிழ்) உட்பட விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment