கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனைப் பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களை விட தற்போது அதிகளவிலான குரங்குகள் வருகை தந்து வீட்டுப் பொருட்கள் மற்றும் பயிர்கள், மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்துவதாக பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் மா மரங்களில் மாங்காய்கள் காய்த்துக் குலுங்குவதால் அதனை உட்கொள்ளவே குரங்குகளின் வருகை அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் சனநடமாட்டம் இல்லாமையினால் குரங்குகள் அவ்விடங்களை ஆக்கிரமித்துளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.