சம்பள பிரச்சினையினை அடிப்படையாக கொண்டு புகையிரத சேவையாளர் தொழிற்சங்கங்கள் கடந்த 26 ம் திகதி முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (30) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த புகையிரத வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்;நோக்கி வருகின்றனர்.
தமது அன்றாட தேவைகளுக்காக புகையிரதத்தின் மூலம் பயணஞ் செய்யம் தோட்டத்தொழிலாளர்கள் அரச ஊழியர்கள் புகையிரத சேவைகள் இடம் பெறாததன் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த புகையிரத சேவைகள் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக புகையிரத்தில் பாடசலைக்கு வரும் மாணவர்கள் பேருந்துகளில் மற்றும் கூலி வாகனங்களில் வரவேண்டி உள்ளதனால் பெரும் பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.
இதனால் ஹட்டன் கொட்டகலை,தலவாக்கலை உள்ளிட்ட பிரதான பாடசாலைகளுக்கு வரும் பல வறிய மாணவர்கள் கடந்த தினங்களாக பாடசாலைக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை மலையக புகையிரத சேவைகள் இடம்பெறாததன் காரணமாக தபால் சேவைகளும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தபால்களை விநியோகம் செய்வதற்கு தபால் திணைக்களத்திற்கு பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலையகப் பகுதியில் உள்ள அதிகமான வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்திற்கு தேவையான வர்த்தக பொருட்கள் புகையிரதங்களின் மூலம் கொண்டு செல்கின்றனர். கடந்த ஐந்;து நாட்களாக புகையிரத சேவைகள் இடம்பெறாததனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மலையக பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான எல்ல,சிவனொளிபாதமலை நுவரெலியா,கண்டி பேராதனை,எம்பக்க, உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதற்கு பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் புகையிரதங்களையே பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இச்சேவை இடம் பெறாததன் காரணமாக சுற்றுலா பிரயாணிகளின் வருகையும் குறைந்துள்ளன இதனால் சுற்றுலா விடுதிகளும் வெரிச்சோடி போயுள்ளன.
எனவே குறித்த வேலை நிறுத்தத்திற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுத்து மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.