350 சவூதி படையினர் ஹௌதி இஸ்லாமிய போராளிகளினால் விடுவிப்பு.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது-

டந்த இருதினங்களுக்குள் சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாகாணத்தின் யேமனை அண்டிய பிரதேசத்தில் ஹௌதி இஸ்லாமிய போராளிகளின் தாக்குதளின்போது கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சவூதி படையினர்களில் 350 பேர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

ஹௌதி இயக்கத்தினரின் இந்த நடவடிக்கையானது அதிஉயர்ந்தபட்ச மனிதாபிமானமான செயலாக பார்க்கப்படுவதுடன், இது சிறந்த அரசியல் ராஜதந்திரம் என்றும் நோக்கப்படுகின்றது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சவூதி படையினர்கள் மீது எந்தவித அத்துமீறல்களோ, சித்திரவதைகளோ செய்யாது மனிதாபிமானத்துடன் நடத்தியதனை சர்வதேசம் ஹௌதி இஸ்லாமிய இயக்கத்தினரை பாராட்டுகின்றது.

ஆனாலும் சர்வதேச ரீதியில் மிகவும் தலைகுணிவை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி சவூதி அரசு இதுவரையில் வாய்திறக்கவேயில்லை.

ஈரானிய ஆதரவு பெற்ற ஓர் இயக்கத்திடம் இவ்வாறு அடிவாங்கினால், நேரடியாக ஈரானுடன் மோதினால் நிலைமை எப்படி இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிப்பதனை அவதாநிக்கூடியதாக உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -