ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு உப தவிசாளர் யூ.எல்.அஹமட் பிரேரணை.




நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக ஓட்டமாவடி சிறுவர் பூங்கா மைதானத்தில் விளையாடும் வீரர்களின் நலனைக் கருத்திற் கொண்டு அங்கு நீர்த்தாங்கி ஒன்றினை வைக்குமாறு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் சபை அமர்வில் தனது பிரேரணையினை முன்வைத்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 12 வது அமர்வு சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உப தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,

ஓட்டமாவடி சிறுவர் பூங்காவை பிரதேசத்திலுள்ள ஏராளமான விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு சிறுவர் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகள் பற்றைக் காடுகள் சூழ்ந்து காணப்படுவதினால் அங்கு இரவு நேரங்களில் போதைப் பாவனையாளர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

குறித்த இவ் விடயங்களை பிரதேச சபை தவிசாளர் கவனத்திலெடுத்து சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிகளை அழகுபடுத்தி ஒரு பாதுகாப்பான பூங்காவாக அமைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று உப தவிசாளர் வேண்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -