அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை காலத்தின் தேவையைக் கருதி புனித அல்-குர்ஆனை பூரணமாக சிங்கள மொழி பெயர்ப்புச் செய்து அதனை (07) உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளது.
இந்நிகழ்வு கொழும்பு பண்டார நாயக் ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜமியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு மொழி பெயர்ப்புப் பிரதியின் முதற் பிரதியை ஜமியதுல் உலமா சபையின் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இவ்வைபவத்தில் மூன்று சமயத் தலைவர்கள், உலமாக்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் ஷாலி, வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், சகோதர இன மக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது வரவேற்புரையை அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.சி.அஹார் முஹமட் வழங்கினார், விஷேட உரைகளை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் போராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தயா அமரசேகரவும் வழங்கினர். தலைமை உரையை அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி வழங்கினார் அதன் பின்னர் ஜனாதிபதியின் உரை இடம் பெற்றது. நிகழ்வின் இறுதியில் நன்றி உரையை உப செயலாளர் அஷ்-ஷெய்க் முர்சித் முழப்பர் வழங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அணைவருக்கும் பெறுமதிவாய்ந்த புனித அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிரதி இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.