அஸ்லம் எஸ்.மௌலானா-
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அவர்களின் பங்கேற்புடன் பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
ஆளுகை புத்தாக்க நிறுவகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் கலந்து கொண்டு, பிரதேச சபையின் செயற்பாடுகளில் ஆலோசனைக் குழுவின் வகிபாகம் தொடர்பில் விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் போ.கோபாலபிள்ளை, சபையின் செயலாளர் கே.ஜோன் பிள்ளை உட்பட மற்றும் பல உத்தியோகத்தர்களும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஆலோசனைக் குழு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் விரிவாக ஆராய்ந்ததுடன் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினார்.