ஆழ்கடலில் வைத்து மீன் குற்றி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணம்!



எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர்  படகில் சென்றுள்ளனர்.

அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனை தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில்  முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்த ஒருவர் மீது மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் ஏறியதால் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குற்றிவிட்டது நோவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டுவரும் நோக்கில் கரைக்கு வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது.

மரணமடைந்தவர் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்மாஆ பள்ளி வீதியை சேர்ந்த  மீரா லெப்பை சஹாப்தீன் (வயது 47) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இம் மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடி துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் நடாத்தி வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :