முதல்வர் தவம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விறுதிப்போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தவைரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்களான எம். சுல்பிகார், எம். நுஃமான், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் மற்றும் உதைபந்தாட்ட ஆர்வலர்கள், ரசிகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தினருக்கும் அக்கரைப்பற்று சூசிட்டி விளையாட்டுக் கழகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இவ் இறுதிப் போட்டியின் முதல் பாதியில் சூசிட்டி விளையாட்டுக் கழகம் ஒரு கோலை புகுத்தி முன்னிலையில் திகழ்ந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது இறுதி நேரத்தில் சோபர் விளையாட்டுக் கழகம் தண்டனை உதை மூலம் ஒரு கோலை அடித்து போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து இப்போட்டித் தொடரின் வெற்றிபெற்ற அணியை தெரிவு செய்வதற்காக வழங்கப்பட்ட தண்டனை உதை முறையில் 6:5 என்ற கோல் கணக்கில் சோபர் அணி வெற்றிபெற்றது.