எம்.ஜீ.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீடிக்கின்ற சில முரண்பாடுகள் என்றோ தீர்வு காணப்பட்டிருக்கும்


 - இராதாகிருஷ்ணன் -

க.கிஷாந்தன்-
றைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜீ.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீடிக்கின்ற சில முரண்பாடுகள் என்றோ தீர்வு காணப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன் என இலங்கையின் கல்வி அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் நேற்று (16.09.2018) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தெரிவித்ததாவது,
அதுமட்டுமல்ல இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவர் உதவி செய்துள்ளார். இலங்கை மக்களை என் மக்கள் என உரிமையோடு அழைப்பார்.
எம்.ஜீ.ஆர் ஒரு சிறந்த நடிகர், அரசியல்வாதி, நல்ல மனிதன் ஆவார். அது மட்டுமல்லாமல் அவர் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்ட மனிதன் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு அவர் உதவி செய்தவர். என்றும் அவர் ஏழை மக்களை கைவிட்டதில்லை என மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -