மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கட்டிடட திணைக்கள பிரதம பொறியியலாளருடன் சந்திப்பு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் மாவட்ட கட்டிட திணைக்கள பிரதம பொறியியலாளரை 2018.08.20ஆம் திகதி - திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பானது சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமினால் இவ்வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டதுடன், இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள நோயாளர் விடுதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு கட்டிடம் ஒன்று அமையப்பெறுவதன் அவசியத்தினையும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், பல அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் இந்நிதியினை கொண்டு வருவதற்கு அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட முன்னெடுப்புக்களையும் பிரதம பொறியிலாளருக்கு மேலும் தெளிவுபடுத்தி, இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.

இவ்விடயங்களை கருத்திற் கொண்ட பிரதம பொறியியலாளர் நிருவாக ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல விடயங்களையும் மிக விரைவில் பூர்த்தி செய்து தன்னாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கி கூடிய சீக்கிரத்தில் இக்கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள நோயாளர் விடுதி பல குறைபாடுகளுடன் காணப்படுவதனால் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை அமைத்துத்ததருமாறு பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக பல சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் இந்நிதி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -