க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

க.கிஷாந்தன்-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 06.082018 அன்று ஆரம்பமாகியது. நாடுபூராகவுமுள்ள 2268 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

முற்பகல் 8.30 தொடக்கம் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச் சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு ஆணையாளர் கோரியுள்ளார்.

காலக் கிரமத்துடன் பரீட்சை அட்டவணைகளை பரீட்சிக்குமாறு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையகத்திலும் 06.08.2018 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -