ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை கிராம சேவகர் பிரிவில் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி அமைக்கப்பட்டு பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று (16)ம் திகதி சனிக்கிழமை புகைத்தலை தடுக்கும் வகையில் செம்மண்ணோடையிலுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு கள விஜயம் மேற் கொள்ளப்பட்டு புகைத்தலோடு தொடர்பானவற்றை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப் கான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முஸம்மில், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆர். ஹக்கீம், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேசத்திலுள்ள தக்வா ஜும்ஆப் பள்ளிவாயல், பாரி பள்ளிவாயல், குபா ஜும்ஆப் பள்ளிவாயல், ஸைப் பள்ளிவாயல் நிருவாகத்தினர் மற்றும் உலமாக்கள் , சாட்டோ, ஸ்ட்டைலோ விளையாட்டுக் கழக நிருவாகத்தினர். கிராம அபிவிருத்தி சங்கம், ஏ.சீ.எம்.சீ.வட்டாரக் கிளை, கல்குடா கராத்தே விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதில் போதைப் பாவனை தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய ஸ்டிக்கர் ஒன்றினையும் சாட்டோ விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.