கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கூர்மையான ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவருக்கு மரண தண்டனை வித்து பாணந்துரை நீதிமன்றம் நேற்று (12) தீர்ப்பளித்துள்ளது.
இத் தீர்ப்பினை பாணந்துரை நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
2005.11.17 ஆம் திகதி பண்டாரகம அட்டுளுகம பிரதேசத்திலுள்ள மொஹமட் இஸ்ஸதீன் என்பவரை படுகொலை செய்ததற்கா சந்தேகத்தின் பேரில் ஏழு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எம்.எல்.மொஹமட் சகரியா, ஜே.எம்.பாஹிம் மற்றும் எம்.எப்.எம்.இக்பால் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
