சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள நல்லிணக்க இளைஞர் பிரதேச இணைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் அம்பாரையில் நேற்று (17)இடம்பெற்றது.
இதன் போது பிரதேச ரீதியில் நல்லிணக்க வேலைத் திட்டங்கள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க செயற்திட்டங்கள், நல்லிணக்கத்துக்கு சவாலான விடயங்கள்,எதிர்கால செயற்திட்டங்களை முன் கொண்டு எதிர்வரும் வருடங்களுக்கு நல்லிணக்க செயற்பாடுகளை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் இதன் போது நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி,
எச்.டப்ளியு.எம்.சுரேகா,எஸ்.எல்.எம்.இஸ்ரத் அலி, எம்.தர்சன் மற்றும் அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment