மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த 13ஆம் திகதி காணாமல் போன துப்பாக்கிகள் வெல்லவெல சந்தஹல விஹாரையிலிருந்து இன்று 16ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விஹாரையின் பிக்குமார் குளிப்பதற்காக ஒத்துக்கப்பட்டுள்ள குளியலறையிலிருந்து அந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் குறித்த விஹாரை அமைந்துள்ளது.
திருடப்பட்ட ரி_56 ரக துப்பாக்கி மற்றும் 5 ரிவோல்வர்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.