ஜுனைத் எம் பஹத்-
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றிஸ்வி நகர் கடற்கரையோரத்தை அண்டிய பகுதியில் வெள்ள நீருக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் சிலர், இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சடலம் கடந்த திங்கட்கிழமை (26) காணாமல் போன மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் வசிக்கின்ற எம்.பாத்துமுத்து (வயது 80) என்பவருடையதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பெண் காணாமல் போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.