பிரான்சில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரெஞ்ச் விண்வெளி மையத்தை பார்வையிடச் சென்ற போது குழுமிய இந்தியர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
மேலும் டூலவ்சில் இந்திய ஊழியர்கள் சிலருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி. "இளம் நண்பர்களுடன் செல்ஃபிக்கள் எடுத்து கொண்டேன்." என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
மோடி அங்கு வந்தவுடன் அவர் பெயரைச் சொல்லி உற்சாகக் கூச்சலிட்டனர் இந்திய மாணவர்களும் ஊழியர்களும். அவர்களுக்காக செல்ஃபி எடுத்துக் கொண்டார் மோடி.
“இளைஞர்கள் செல்ஃபியை விரும்புகின்றனர். எனவே பிரதமர் மோடி அவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்” என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் ட்வீட் செய்துள்ளார்.