எந்தவொரு சந்தர்பத்திலும் முஸ்லிம்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்வதற்காக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்.
அதற்காக மக்களின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக்க தமிழ் பேசும் அராசங்க பிரதான அதிகாரியொருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு முன்னைய அரசு இனவாதம் பூசியது.
நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றனர். அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முஸ்லிம் , தமிழ் மக்கள் வெற்றியடையச் செய்தனர்.
கடந்த அரசாங்கத்திடம் நான் விடுத்த சிறு கோரிக்கையை அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தி, அரச ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட்டது.
இந்தப் பரப்புரையை முறியடிப்பதற்கு போதிய கால அவகாசம் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.