கிண்ணியா குறிஞ்சாகேணியில் வாழும் நிரந்தர வதிவிடமற்ற, விஷேட தேவையுடைய, வறிய குடும்பம் ஒன்றுக்காக 'சமூக பொருளாதார மற்றும் இளைஞர் அபிவிருத்தி தாபனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு அண்மையில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இவ் வீட்டினை சேடா அமைப்பின் தலைவர் நளீஜ் அப்துல் சலாம் குறித்த குடும்பத்தினரிடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் சேடா அமைப்பின் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.முபாரக், முகமட் அஸாம், மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவில் சமூக பொருளாதார மற்றும் பிரதேச இளைஞர்களின் மேம்பாட்டினை நோக்காக கொண்டு சேடா அமைப்பு கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.
இவ்வமைப்பின் மூலம் இளைஞர்களுக்கான தகவல் தொழில்நுட்ப மையம், பெண்களின் சுய தொழில் ஆளுமையினை மேம்படுத்தும் நோக்கில் இலவச தையல் பயிற்ச்சி நிலையம் உள்ளிட்ட பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)