திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளின் ஒன்றுகூடல்! “ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்”பைஷல் இஸ்மாயில்-
திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து கலைத்துறைசார் வாண்மையை மேலும் முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் “ஒரு பொழுதில் ஒன்று கூடுவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட பெண் எழுத்தாளர்கள் ஆளுமைகளின் ஒன்றுகூடல் நேற்று மாலை (03) மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்ஷனின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்த ஒன்றுகூடலின் வளவாளர்களாக, தம்பலகாமம் பிரதேச செயலாளர் (திருமதி) ஜெயகௌரி ஸ்ரீபதி, திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியின் அதிபர் (திருமதி) சுபத்திரா ஜோன் தேவதாஸ், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி நிரோஷா, முன்பள்ளி அதிபர் அருஷா ஜெயராஜா, சட்டத்தரணி (திருமதி) ஐஸ்வர்யா சிவகுமார், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற மாகாணப் பணிப்பாளர் (திருமதி) என்.ஸ்ரீதேவி, கிழக்கு பல்கலைக்கழக நூலகர் (திருமதி) பானு சுதாகரன், சுதந்திர ஊடகவியலாளர் கல்யாணி நவரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தற்கால இடர் மிகுந்த சூழலை எதிர்கொள்வதில் பெண்களின் பங்களிப்பு, பெண்களும் சட்டமும், பெண் ஆளுமையும் இன்றைய நிலையும், நிர்வாகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், பெண்களும் நிர்வாக ஆற்றலும், பேகர் சமூக பண்பாடும் தற்காலத்தின் சவால்களும், பெண் தலைமைத்துவ குடும்பமும் தற்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், பெண்களும் அரசியலும், அரங்கும் பெண்களும், தற்கால கல்வி முறைமையில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்புக்களில் பல்வேறுபட்ட முக்கிய விடயங்கள் பேசப்பட்டதுடன் பாடல், வயலின் இசை, கவிதை, நாடகம், கூத்து போன்ற நிகழ்வுகளும் பெண்களினால் நிகழ்த்தப்பட்டது.

இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பெண் இலக்கிய ஆளுமைகளை கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட 100 சிறுகதை அடங்கிய நூல்களையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சனினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :