மலையக சமூக நலநோக்கு என்ற புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம்



தலவாக்கலை பி.கேதீஸ்-
ஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தின் இளைஞர்களினால் மலையக சமூக நலநோக்கு என்ற புதிய அமைப்பொன்று நேற்றைய தினம் 10.9.2021 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. மேலும் இந்த அமைப்பின் ஊடாக பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும், சுகாதார உதவிகளை வழங்குவதற்காகவும்,விளையாட்டு மற்றும் சில சமூக அபிவிருத்திகளை மேற்கொள்வதனை நோக்காக கொண்டு இந்த மலையக சமூக நலநோக்கு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அத்தோடு இந்த அமைப்பின் முதலாவது அபிவிருத்தி செயற்பாடானது 10.09.2021 அன்றைய தினமே மஸ்கெலியா பிரவுன்லோ ஹீ-முத்துமாரியம்மன் ஆலய பெயர் பலகை பொருத்தப்பட்டது. மேலும் ஆலயத்தின் இரண்டு கோபுரங்களுக்கும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.இதன்போது அமைப்பின் தலைவர்,செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், ஆலயத்தின் பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :