நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையின் ஏற்பாட்டில் "சுவதாரணி" வழங்கிவைப்பு !


நூருல் ஹுதா உமர்-

த்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கான மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான "சுவதாரணி" ஆயுர்வேத பானம் அண்மையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பிரோஸா நக்பரிடம் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் தீகவாவி, திராய்க்கேணி போன்ற பிரதேசங்களுக்கும் அரச காரியாலயங்கள், பாதுகாப்பு படையினர், தனிமைப்படுத்தப்பட்டோர், ஊடகவியலாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்குமாக இதுவரை ஏறத்தாழ 58 ஆயிரம் "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்போது நாட்டை ஆட்கொண்டிருக்கும் மூன்றாம் அலையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட "சுவதாரணி" ஆயுர்வேத பான பக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இது மாத்திரமின்றி கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் ஏற்பாட்டில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :