தோட்ட துறைமார்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி அட்டனில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்....

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்ட முகாமையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு கோரி அட்டன் மல்லியப்பு சந்தியில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று இன்று 03/03/2021 காலை முன்னெடுக்கப்பட்டது.

தோட்டமுகாமையாளர் சங்கத்தினாலே இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது,

2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் தோட்ட முகாயையாளர்களுக்கு எதிராக மூன்று வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஓல்டன் தோட்டத்தில் முகாமையாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டிப்பதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

அராஜம் ஒழிக , தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்து, தேயிலை தொழிற்துறையில் அரசியல் மயமாக்கலை நிறுத்து, எனற வாசகங்களை கையில் ஏந்திய வண்ணம் கோசமெழுப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை தொழிற்துறை நாட்டின் பெருளாதர வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கின்றது அத்துறையில் பணியாற்றும் எமக்கு உறிய பாதுகாப்பை வழங்க நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் எனவுமே தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் சகல பெருந்தோட்ட முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :