நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.டி, களுவராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.ஜெகராஜன், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் (மார்க்கெட்டிங்) பணிப்பாளர் எம்.ஜி.எஸ்.எஸ். கித்சிறி, பேராசிரியர் எஸ்.எல்.றியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி திட்டத்தின் பயன்கள், பிரதேச அளவில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் வறுமை ஒழிப்பில் அதன் பங்களிப்பு குறித்து சமுர்த்தி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வின்போது கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். முஆபிகா, சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சிரேஸ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா மற்றும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதயா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் வரவேற்புரையை சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப்பீட சிரேஸ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் நிகழ்த்தினார். தலைமையுரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்கினால் நிகழ்த்தப்பட்டது.
நூல் பற்றிய விமர்சன உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் நிகழ்த்தினார், நூலின் ஏற்புரையை நூலாசிரியர், சமுர்த்தி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் நிகழ்த்தினார்.
நிகழ்வின்போது அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் கித்சிறி கமகே, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், பதில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ்.ஜெகராஜன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் எம்.ஜி.எஸ்.எஸ்.கித்சிறி, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, , சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.டி, களுவராச்சி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்வில் புகைத்தல் எதிர்ப்பு தின கொடி விற்பனையில் அதிகூடிய நிதிகளைச் சேகரித்த மாவட்டத்தில் முதலிடம் பெற்றுத்தந்த முதல் 10 கிராமமட்ட சீ.வி.ஓக்களை கௌரவித்தல் நிகழ்வும் அதில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்களை பெற்ற சீ.வி. ஓக்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு சிப்தொற புலமைப்பரிசில் பெற்று 2024 ஆம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 15 மாணவர்கள்ளும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நன்றி உரையை சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment