இலங்கையில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மயில்வாகனம் உதயகுமார், கொரோனாவை ஒழிக்க வீட்டில் இருந்தே அமைதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள போதும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என சில தொழில் தரப்பினர் தங்களது அன்றாட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தருணத்தில் அவர்களுக்கு கௌரவம் செலுத்துவதாகவும் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த வருடம் போன்றே இந்த வருடமும் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களால் ஒன்றுகூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர் அனைவரினதும் தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு சம்பள பிரச்சினை உள்ளிட்ட அனைத்தும் தீர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட பிரார்த்தனை செய்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் தனது தொழிலாளர் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.