அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம்சங்கர்.
காரைதீவு நிருபர் சகா-கடந்தகால தமிழர்அழிப்பு செயற்பாடுகளால் பொதுஜனபெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச மீது ஒட்டுமொத்த தமிழ்மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே அனைத்துஇன மக்களாலும் விரும்பப்படும் பலமான வேட்பாளர் சஜித்தின் வெற்றியில் பங்காளிகளாவோம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று(1) காலை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாமல் சகல இனமக்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளது.
பிளவுபடாத இலங்கைக்குள் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கல் என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடுத்தபடி எனலாம்.
சிலதினங்களுக்கு முன்பு கொழும்பில் அவரைச்சந்தித்து நான் பேச்சுவார்த்தை நடாத்தியபோது மாகாணசபைக்கான அதாவது 13வது அரசியலமைப்பு திருத்தத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் அதாவது காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கி பூரணமாக மாகாணசபை இயங்கச்செய்யவேண்டும். அப்போது நாட்டிலுள்ள தமிழ்பேசும் மக்களின் அரைவாசிப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன்.
இப்போதுள்ள மாகாணசபைகள் பலாப்பழத்தில் சுளையை எடுத்துவிட்டால் எஞ்சியுள்ள வைக்கோல் போன்றது. அந்தச்சுளையான காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவேண்டும். அதனையே வலியுறுத்தினேன்.இது தமிழ்மக்களின் நீண்டகால உயிர்த்தியாகங்களுக்கான தீர்வின் முதற்;படி எனலாம்.
அவர் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது அவரது தேர்தல் விஞ்ஞாபனம் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மேலும் தமிழர்தரப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்று மதில் மேல் பூனைகளாக இருக்கமுடியாது.
அப்படிஇருந்தால் அது அரசியல் இராஜதந்திரமேயல்ல. நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறனின்றி அரசியல் செய்யமுடியாது. முக்கியமான தருணங்களில் ஓடிஒளியமுடியாது. மக்கள்விரும்பியாவறு வாக்களிக்கலாம் என்று சொல்ல இத்தனைநாட்கள் தேவையில்லை. எதுஎப்படியிருப்பினும் வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் என்றோ தீர்க்கமான முடிவைஎடுத்துவிட்டனர். அது எதிர்வரும் 18ஆம் திகதி தெரியும். மதில்மேல் பூனைகள் தொடர்ந்தும் மதில்மேலலேயே இருக்கவேண்டிவரும். அதனையே அவர்களும் விரும்புகிறார்கள். நாம் அதற்காக வாழாவிருக்கமுடியாது.
ஓடுகின்ற குதிரைக்குத்தான் பந்தயம் கட்டலாம். ஓடாதகுதிரைக்கு கட்டிப்பிரயோசனமில்லை.
இன்றைய 35 வேட்பாளர்களுள் சகலஇன மத மக்களையும் சமமாக மதித்து நிரந்தர சமாதானத்துடன் இலங்கையை நகர்த்திச்செல்லும் அரசியல் ஆளுமை வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கே உண்டு.
மாலைதீவில் புளொட் உறுப்பினர்கள் சுமார் 180மாட்டியபோது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இராஜதந்திரரீதியாக அவர்களை விடுவித்த நாட்டுக்குக்கொண்டுவந்தார்.
ஸ்ரீ' போராட்டம் நிலவியகாலத்தில் ஜனாதிபதி பிரேமதாச ஒரேஇரவில் ஸ்ரீ பிரச்சினையை தீர்த்துவைத்தவர். 10வருடமாக விமல்வீரவன்ச அமைச்சராகவிருந்தபோது வடக்கு கிழக்கில் எத்தனை வீடுகட்டியிருப்பார். ஆனால் அமைச்சர் சஜித் கடந்த 4வருடங்களில் பலநூறு வீடுகளைகட்டி பகிரங்கமாக திறந்துவைத்துள்ளார். எதிர்காலத்திலும் அவர் இனமதபேதம்பாராமல் இத்தகைய பணிகளை மென்மேலும் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
இதனைவிட சமாதானம் அமைதியை விரும்புபவரும் சகலஇனமத மக்களையும் அரவணைத்துச்செல்ல தயாராகவிருப்பவர். அவரது தந்தையின்காலத்தில் இந்தியஇலங்கை ஒப்பந்தம் உருவானதைப்போல் இவரும் இனப்பிரச்சனையை தீhத்துவைப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.
வெள்ளைவான் கலாசாரத்தையும் அராஜகத்தையும் ஏமாற்றுபவர்களையும் தமிழ்மக்கள் ஏலவே நன்குணர்ந்தவர்கள். பொதுவாக தமிழர்கள் அறிவை முன்வைத்து உணர்ச்சியை பின்வைப்பவர்கள். ஆனால் தமிழ்த்தலைமைகள் இன்று உணர்ச்சிக்கு முக்கியத்துவம்கொடுத்து நிறைவேற்றமுடியாத 13அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தீர்வெடுக்கமுடியாமல் மக்களை நட்டாற்றில் கைவிட்டுள்ளனர். தேர்தல் முடிந்தபின்புதான் அவர்கள் அவர்களது தீர்மானத்தை வெளியிடுவார்கள். அதுவரை நாம் காத்திருக்கமுடியாது. அது தேவையுமில்லை. அவர்கள் சிலவேளை சஜித்திற்கு ஆதரவென்றால் அவர்களிமீதான எதிர்ப்பலைகள் சஜித்தை மண்கவ்வச்சௌ;துpடக்கூடும். ஒருவேளை அப்படிநடந்தால் சஜித்தின் தோல்வி சிறுபான்மையினத்தின் தோல்வி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எவ்வித நிபந்தனையையும் முன்வைக்காமல் அமைச்சர்களான ஹக்கீம்றிசாட் பதியுதீன் போன்றவர்கள் சஜித்திற்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள்தான் உண்மையில் இராஜதந்திரிகள் அரசியல் சாணக்கியர்கள். சமுகம்சார் தேவைகளை இதனூடாக தீர்த்துவைக்கமுடியுமென நம்புகிறார்கள்.
எனவே மேலும் மேலும் தமிழ்மக்கள் ஏமாறாமல் சரியான தேர்வான வேட்பாளர்சஜித்தின்பின்னால்அணிதிரள்வோம் வாரிர்; என்றார்.