-கல்முனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் -
எம்.என்.எம்.அப்ராஸ்-
ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தேர்தல் செயற்பாடு காரியாலயம் கல்முனையில் இன்று(01/11/2019) திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும்,நகர திட்டமிடல் நீர்வளங்கள்,உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
இந்த ஜனாதிபதி தேர்தல் எமது கட்சியை பொறுத்த மட்டில்
கடந்த காலத்தை போல் அல்லாமல்
இம்முறை ஜனாதிபதி வேடப்பாளராக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்யும் முன் நாங்கள் அவரை தெரிவு செய்து விட்டோம்.
ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்ய வேண்டும் வெற்றியின் முக்கிய பங்காளராக நாங்கள் நிறைய உழைக்கவேண்டியுள்ளது.எதிர்வருகின்ற இரு வார காலப்பகுதி மிக முக்கியமானது எமது சமூகத்தின் தலை விதியை தீர்மானிக்கின்ற வாரங்களாகவே நாம் இதனை கருதிற்க்கொள்ள வேண்டும்
இதனடிப்படையில் எமது வாக்களிப்பு விகிதாசாரத்தை நாம்அதிகரிக்க வேண்டும்.
முழு நாட்டிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆகக் கூடிய வாக்களிப்பு இடம்பெற்ற ஒரு தொகுதியாக கல்முனைத்தொகுதி
அடையாளப்படுத்தப்பட்டது.அதை விட இம்முறை அதிகாமக நாம் வாக்களிக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த உள்ளுராட்சி தேர்தலின் பின் இவ் கல்முனை தொகுதியில் சில பிரச்சினைகள் காணப்பட்டன .
அந்த தேர்தலின் நிழல்கள் இந்த தேர்தலில் படிவதை தவிர்க்க வேண்டும் நாங்கள் மிக நிதானமாகவும் , சாணக்கியமாவும் ,நேர்மையாகவும் துரநோக்குடன் இவ் விடயங்களை கையாள வேண்டும் என்றார்.
இதன் போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் அபிமானிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.