மட்டக்களப்பு- தொப்பிகல- ஆவட்டியவெளி அரசாங்க காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டி விற்பனைக்காக உழவு இயந்திரத்தில் கொண்டுசெல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தேக்குமரக்குற்றிகளை புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் 13.10.2019 அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
உழவு இயந்திரத்தின் சாரதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இழுவைப்பெட்டியில் மரக்குற்றிகள் ஏற்றப்பட்;ட உழவுஇயந்திரம்; தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வட்டார வன அதிகாரி என். செல்வநாயகம் தெரிவித்தார்.
இந்த உழவு இயந்திரத்தில் சுமார் 10 அடி நீளமுடைய 35 தேக்கு மரக்குற்றிகள் காணப்பட்டன.
வன அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பயனாக இம்மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொப்பிகல அரசாங்க காட்டுப்பகுதியில் விற்பனைக்காக நீண்டகாலம் தொடக்கம் மரங்கள் வெட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதனை முறியடிப்பதற்கு வன அதிகாரிகள் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர