போதைப் பொருள் பாவனை பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யும் நிகழ்வு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஜனுபர் தலைமையில் இன்று திங்கட்கிழமை (30) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது.
போதைப் பொருள் பாவனை பற்றி விழிப்புணர்வை வழங்குவதற்காக வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் போன்றவர்களினால் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர், சம்மாந்துறை பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை அழிப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.இக்ராம், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment