அனர்த்த மற்றும் அவசர காலங்களில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தினை பேணுதல் மூன்று நாள் பயிற்சி செயலமர்வு



பாறுக் ஷிஹான்-
னர்த்த மற்றும் அவசர காலங்களின் போது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தினை பேணுதல், குறித்த நிலைமைகளில் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான திறனை வலுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம் (FHB) மற்றும் குடும்ப திட்டமிடல் அமைப்பு (FPA) ஆகியவற்றின் அனுசரணையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு குறித்த பயிற்சி செயலமர்வினை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதாரத் தாதிய சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ,சுகுனண், பிராந்திய தாய் சேய் நலன் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரியுமான டொக்டர் ஐ.எம்.முஜீப், சேனைகுடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.பி.எம்.சில்மி ஆகியோர் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.

பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்ட சகலருக்கும் இந்நிகழ்வின் போது சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :