சமூகப் பணிகளை முன்னெடுக்க பிரதேச மக்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம் தேவை - தவிசாளர் ஏ.ஜீ.றபீக்.




எச்.எம்.எம்.பர்ஸான்-
மூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல பிரதேச மக்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம் தேவைப்படுவதாக மீராவோடை மேற்கு கிராம சக்தி மக்கள் சங்க தவிசாளர் ஏ.ஜீ.றபீக் தெரிவித்தார்.
மீராவோடை மேற்கு பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்து அதில் பல நோக்கு கட்டடம் ஒன்றினை அமைப்பது தொடர்பான முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று (13) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
ஒரு பிரதேசத்தின் பொதுத் தேவைகளை முன்னெடுத்துச் செல்லும் போது அதற்கு பிரதேசத்தின் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் அதிகம் பங்களிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு அதனை மேற்கொண்டால் மாத்திரமே அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அந்தவகையில்தான் மீராவோடை மேற்கு பகுதியில் குறைபாடாக காணப்படும் பல நோக்கு கட்டடம் இல்லாமையால் அரச உத்தியோகத்தர்கள் தனியார் வீடுகளில் தங்களுடைய காரியாலயங்களை அமைத்துக் கொள்கின்றனர் அவ்வாறு அமைக்கப்படுகின்ற காரியாலயங்கள் அவ்வப்போது இடமாற்றப்படுவதினால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
இதனை கருத்திற் கொண்டுதான் கிராம சக்தி மக்கள் சங்கம் கட்டடத்தை அமைப்பதற்கு காணி ஒன்றினை கொள்வனவு செய்வது தொடர்பான முதலாவது சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது இதில் குறித்த பிரதேசத்திலுள்ள பத்தொன்பது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அதில் மூன்று அமைப்புகள் மாத்திரமே பங்குபற்றின.
எனவே குறித்த பகுதிக்கு தேவைப்பாடாகவுள்ள கட்டடத்தை அமைக்க காணி கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் அனைவரும் கட்சி, கொள்கை வேறுபாடின்றி செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -