இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹாரூன் மரிக்கார் தேர்தல் திணைக்களத்துக்கு எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
மித மிஞ்சிய தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பட்கற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆணாலும் கொழுத்த கட்சிகள் முத மிஞ்சி செலவு செய்து தம் வேட்பாளர்களை வெல்ல வைத்து விட்டு குறைந்த செலவினத்தை காட்டுவதாக செய்திகள் வருகின்றன.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்களும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என்பது நியாயமானதாக தெரியவில்லை. அவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட அளவாவது செலவு செய்யாமை காரணமாகவே தோற்றார்கள் என்பதே உண்மை.
ஆகவே தேர்தலில் போட்டியிட்ட சகலரும் தேர்தல் செலவு அறிக்கையை கயளிக்க வேண்டும் என்பதை நீக்கி, தேர்தலில் வெற்றி பெற்றோரும் சபைகளுக்கு நியமிக்கப்பட்டோர் மட்டுமே செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என சட்டத்திருத்தத்தை தேர்தல் திணைக்களம் முன் வைக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment