அகில இலங்கை முஸ்லிம் லீக வாலிப முன்னயினை ஸ்தாபகர் பாக்கீர் மாக்கார் ஆரம்பித்த ஸ்தாபகர் தினம்



அஷ்ரப் ஏ சமத்-
கில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று 20.05.2025 கொழும்பு 7 ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் சாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.ள
இந் நிகழ்ச்சிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு பிரதான உரையை இலங்கையின் ஜெனிவாவுக்கு துாதுவராக கடமையாற்றிய கலாநிதி தயான் ஜயதிலக்க அவர்கள் சர்வதேசத்தில் பலஸ்தீன் யுத்தம் மற்றும் அங்கு நடைபெறும் அநீதிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் இந் நிகழ்வில் முன்னாள் சபா நாயகர் பாக்கிர் மாக்கார் பற்றி நினைவு மலரொன்று வெளியீட்டு வைக்கப்பட்டது.

வெளிநாட்டுத் தூதுவர் முன்னாள் அமைச்சர்களான ஏ.எச். பௌசி, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உட்பட முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் புத்திஜீவிகள் பலஸ்தீன் சுதந்திர உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜெனிவாவுற்கான இலங்கை பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க பலஸ்தீன் நாட்டுக்காக (பி.எல் ஓ) சார்பாகவே இலங்கை இருந்து வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் யுத்தம் நடைபெறும் போது அவர்கள் யுத்தம் பற்றி நலம் காப்பு நிலையங்களை கொழும்பில் திறந்திருந்தார்.

அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையார், ஆர்.பிரேமதாச, மகிந்த ராஜபக்ச ,இருந்த வந்த ஆதரவு கடந்த ரணில் விக்கிரமசிங்கவும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஹரின் பெர்ணான்டோ ஆகியோர்கள் இணைந்து சுற்றுலாத்துறை என்ற போர்வையில் இஸ்ரவேலரை இலங்கையில் தங்குவதற்கும் அவர்கள் ஏனைய சொத்துக்கள் வியாபாரம் மற்றும் பொத்துவில் அருகம்பேயில் அவர்களுக்கு கலாச்சார நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதாகும் ஆகவே தற்போதைய அநுரகுமார அரசு அதனை தொடர்ந்து கொண்டே செல்கிறது. இவ் விடயம் பற்றி பாராளுமன்றத்தில் காரசாரமாக பேசுவதற்கு இதை தடுப்பதற்கு திரானி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்று என்னால் சொல்ல முடியும் அல்லது அதற்குரிய பலம் அவர்களிடம் கிடையாது. என என்னால் சொல்ல முடியும்
உலகில் எந்தவொரு நாட்டுக்கும் நடக்காத 80 வீதமான சிறுவர்களும் பெண்களும் அநியாயமாக இஸ்ரவேல்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அங்கு பட்டினிச் சாவு இடம்பெறுகின்றது. இதனை உலக நாடுகள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்க முடியாமல் நாமும் உலக நாடுகள் உள்ளன. என கலாநிதி தயான் ஜயதிலக்க உரையாற்றினார்.







.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :